தூத்துக்குடி-திமுக பொதுக்கூட்டம்.

இந்தியை மட்டுமில்லாமல் சமஸ்கிருதத்தையும் புகுத்தி, நமது கலாச்சாரத்தை அழிக்க நினைகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களின்  96வது பிறந்தநாள் மற்றும் வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்   விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.அப்போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை உலகிற்கு தெரிந்ததே தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் சட்டமன்றத்தில் பேசியதில் தான். தேர்தலுக்கு முன்பு தமிழ் நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது என்று எல்லா தொலைக்காட்சியிலும் பேசினர். இந்த நேரத்தில் சினிமாவில் இருந்தவர்கள் எல்லாம் புகுந்து விட்டனர். அவர்கள் வெற்றிடத்தை நிரப்பினார்களா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகும் அமைச்சர்கள் சட்டமன்றத்தில் அம்மா விற்கு லாலிபாடுகின்றனர் என்றார். நமது கலாச்சாரத்தை அழிக்க இந்தியை கொண்டு வருகின்றனர்  நமக்கு தெரியாமல் நவோதயா பள்ளி,கேந்திரவித்தியாலயம் மூலம் சமஸ்கிருதத்தை புகுத்துகின்றனர். சமஸ்கிருதத்திற்க்கு இப்போது என்ன அவசியம். 37 பேர் டெல்லி போய் என்ன செய்ய போகிறார் என பலர் கேட்கின்றனர் இந்த  பிரச்னை பற்றி கேட்க தான் கனிமொழி டெல்லி சென்றிருக்கிறார் என்றார்.இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர்  கீதாஜீவன் எம் எல் ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், நிர்வாகிகள் உள்பட திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..