காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் இராமநாதபுரத்தில் மத நல்லிணக்க பிரார்த்தனை…

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ராமநாதபுரம் Je.S.ரமேஷ்பாபு தலைமையில் வழிவிடு முருகன் கோயில், மசூதி, சர்ச் ஆகியவற்றில் சர்வ மதப் பிரார்த்தனை நடந்தது. இதையத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கொடியேற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில 500 உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு பழம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் பை வழங்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ். விக்டர், ஆர்ட் கணேசன், வழக்கறிஞர் அன்புச்செழியன், மாவட்டத் துணைத் தலைவர்கள் எம்.கே. முத்துகிருஷ்ணன், எஸ். வி.கணேசன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுச் செயலர்கள் அழகு, மோதிலால் நேரு, முனியசாமி, சேவா தள தலைவர் காருகுடி சேகர், வட்டாரத் தலைவர்கள் கோபால், ஜோதிபாலன், சுப்ரமணிய சேர்வைக்காரர், சேதுபாண்டியன், தனசேகரன், முனீஸ்வரன், நகர் தலைவர் கோபி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆனந்த் உத்திரலிங்கம், விக்னேஷ்வரன், மற்றும் பாஸ்கரசேதுபதி, முகமது யூசுப், செய்யது அப்தாகீர், கார்மேகம், பாபு, பாண்டியன், ஜபருல்லாகான், சுப்ரமணியன், மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image