நிலக்கோட்டையில் இந்து முன்னணியினர் 15 பேர் கைது..

நிலக்கோட்டை நால்ரோட்டில்  தஞ்சாவூரில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடை ஸ்வரர் சுப்பிரமணியனை கைது செய்த போலீசாரை கண்டித்து திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட போது மதத்திற்கு ஒரு சட்டத்தை பயன்படுத்துவதை கண்டித்தும், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இத்தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு லாவண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

நிலக்கோட்டை நால் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..                                     இந்த சாலை மறியலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட செயலாளர் இந்து முன்னணி ஜெயக்குமார், நிலக்கோட்டை நகர செயலாளர் ராஜா, அம்மையநாயக்கனூர் நகரத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரதாப் கிருஷ்ணன் கோபிநாதன் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..