உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர்ஆட்டோவும் மோதி விபத்து..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியிலிருந்து பள்ளிகுழந்தைகள் 10க்கும் மேற்பட்டோரை ஷேர்ஆட்டோவில் ஏற்றி உசிலம்பட்டியை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ரெங்கசாமிபட்டியில் எதிரே வந்த லாரி ஷேர்ஆட்டோமீது நேருக்க நேர் மோதியது.

இதில் பயனித்த சாந்தினி (14), மகாலட்சுமி (12), ராசிகா (13), கோபிகா (15), பிரகாஸ் (15), சஞ்சய் (11), தனலட்சுமி (9), அர்ச்சனா (13) பள்ளிகுழந்தைகளை பலத்தகாயங்களுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்தனர்.

அதனைதொடர்ந்து காயமடைந்த அனைவருக்கும் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து உசிலம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த விபத்துகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..