
தற்போது நாடு முழுவதும் குடிநீர் பஞ்சத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாநகராட்சியின் அலட்சியத்தால் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு மேலத்தெரு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக சாலையில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் வீணாக செல்கிறது.
பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. நம் நாடே ஒரு குடம் தண்ணீருக்காக தெருத்தெருவாக அலையும் நேரத்தில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர் வீணாவதைக் கண்டு பொதுமக்கள் வேதனை அடைகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்