கோவில்பட்டி அருகே மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி..

கோவில்பட்டி அருகேயுள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தினை சேர்ந்த மருதையா என்பவரது மகன் மாரியப்பன். கூலி தொழில் செய்து வந்த மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவில்பட்டி புதுக்கிராமத்தினை சண்முகப்பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சண்முகப்பிரியா கர்பமாக உள்ளார்.

இன்று (18/06/2019) காலையில் வெகுநேரமாகியும் மாரியப்பனும், அவரது மனைவியும் வீட்டை வீட்டு வெளிய வரவில்லை என்பதால், அருகில் வசிக்கும் மாரியப்பன் சகோதிரி காளியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். வீடு உட்புறமாக பூட்டி இருந்துள்ளது. இதனை தொடர்ந்து தனது தம்பியை பெயரை சொல்லி அழைத்துள்ளார். பதில் வரவில்லை, வெகுநேரமாக கூப்பிட்டு இருவரும் வெளியே வரவில்லை என்பதால், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்து இருக்கின்றனர். மாரியப்பன், சண்முகப்பிரியா இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் முதல் அறையில் அரை மயக்கத்தில் காயங்களுடன் மாரியப்பன் கிடந்துள்ளார். உள்ளே இருக்கும் படுக்கை அறையில் சண்முகப்பிரியா ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையெடுத்து போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சண்முகப்பிரியா சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்த நிலையில் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி தன்னை வேலைக்கு போகச் சொல்லி தொந்தரவு கொடுத்தவுகம், நேற்று இரவும் இது தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதால் தகராறில் கத்தியால் தனது மனைவி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள தன்னுடைய கழுத்து, கைகளில் கத்தியால் குத்தியதில் மயக்கமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..