கீழக்கரை தாலுகாவில் நாளை (19/06/2019) ஜமாபந்தி..

கீழக்கரை தாலூகாவிற்கு உட்பட்ட பகுதிகளான உத்திரகோசமங்கை, கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய 3 பிர்க்காவிற்கும் நாளை ( 19.06.19.) முதல் வருவாய் பசலி தீர்வை எனும் ஜமாபந்தி நிகழ்வு இராமநாதபுரம் மாவட்ட துணை ஆட்சியர் தணிகாச்சலம் அவர்கள் தலைமையில் கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பிர்க்கா வரிசைப்படி கீழக்கரை உட்பட்ட பகுதிகளுக்கு நாளை மறுநாள் 20.06.19. அன்று ஜமாபந்தி நடைபெறுகிறது. அவ்வமயம் தங்களது இடத்திலுள்ள அலுவலக ரீதியான பிரச்சனைகள் அதாவது பட்டா, பட்டா பெயர் மாற்றம், சிட்டா அடங்கல் மற்றும் ஆன்லைன் குறைபாடுகளுக்கு தீர்வு கிடைக்கவும், தாலூகா வருவாய் பிரிவில் ஏதேனும் குறை இருப்பினும் உடனடி தீர்வு கிடைத்திட அல்லது நெடுநாள் கிடப்பில் கிடக்கும் விசயங்களுக்கும் வழிமுறைகள் காண  இது ஓர் வாய்ப்பு ஆகும்.

ஆகவே, குறை நீங்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

தகவல்:- மக்கள் டீம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal