பங்களாச் சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

நெல்லை மாவட்டம் பங்களாச்சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை இயக்குநர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அலுவலரின் ஆலோசனையின் பேரில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பள்ளியின் தாளாளர் தனபால் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜாமணி தீ விழிப்புணர்வு பற்றியும், நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தீ தடுப்பு பற்றியும் மற்றும் ஏட்டு கணேசன் வீரர்கள் மகேஷ் மாடசாமி, வெள்ளபாண்டி, உதயபிரகாஷ், சாமி, ஆகியோர் செயல்விளக்கம் மூலம் செய்து காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன் துரை, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளி உடற்பயிற்சி இயக்குனர் ஜேம்ஸ் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் ஏட்டு கணேசன் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்