இராணிப்பேட்டையில் பெற்ற குழந்தையை தன் சுகத்துக்காக கள்ளக் காதலுடன் சேர்ந்து தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…

வேலூர் சிப்காட் வ ஊ சி நகர் பகுதியை சேர்ந்த ராமசந்திரனுக்கும் வாலாஜா பாக்குபேட்டை பகுதியை சேர்ந்த காவியாவுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர்க்கு 6 வயதில் தருண் என்ற பிள்ளை உள்ளது.

கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டு கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் காவியா வாலாஜா பாக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த காவியாவுக்கும் ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாகுவுக்கும் கள்ளக் காதல் மலர்ந்து உள்ளது. இதனை அறிந்த தியாகு தயார் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார். இருவரும் வாலாஜாவில் உள்ள பெல்லியப்பா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கள்ளக் காதலனான தியாகு எவனோ பெற்றப் பிள்ளையை நான் ஏன் வைத்து வளக்க வேண்டும் என்று அந்த குழந்தையை கொடுமை படுத்தி உள்ளனர். இதனால் சண்டை வந்துள்ளது.

இதனை அறிந்த காவியாவின் அக்கா அஜந்தா காவல் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் என் தங்கை மகனை கொடுமைப்படுத்துவாதக புகார் கொடுத்து உள்ளது. இதனை விசாரித்த உதவி காவல் ஆய்வாளர் பிள்ளை கேட்டால் யாருடன் செல்கிறதோ அவருடன் தான் செல்வேன் என்று சொல்லியுள்ளார். பிள்ளை கேட்ட போது நான் அம்மாவுடன் செல்வதாக கூறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் தியாகுவுடன் சேர்ந்து 13.06.19 அன்று குழந்தையை குளிக்க வைப்பதாக கூறி இருவரும் தண்ணீர் நிறைந்த ப்ளாஸ்ட்டிக் ட்ரம்மில் அழுத்தி துடிதுடிக்க கொன்று உள்ளனர். அதன் பின் இருவரும் சேர்ந்து ஆற்காடு அருகே உள்ள டெல்லிகேட் பாலாற்றில் யாருக்கும் தெரியாமல் இரவு புதைத்து விட்டு சென்றுள்ளனர்.

இந்தத் தகவலை அறிந்த தென்கடப்பந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அதியமான் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரனை மேற்கொண்ட போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் குழந்தையை கொலை செய்து புதைத்ததை ஒப்புகொண்டனர் இதனை அடுத்து ஆற்காடு வட்டாட்சியர் வத்தட்சலா முன்னிலையில் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க முடிவு செய்து அதற்கான பனி துவங்கியது சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தடவியல் நிபுணர் ஆரி தலைமையிலான குழு மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் நாகேந்திர குமார் தலைமையில் ஆற்காடு பாலாற்றில் புதைத்த இடத்தை குழந்தையின் தாய் காவியா அடையாளம் காட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..