மதுரையில் “தமிழர் மரபுக்கெதிரான தமிழ் அன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு” சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில், பிராமனிய வேத முறைப்படியும் இத்தாலிய வடிவத்திலும் தமிழ் அன்னை சிலை அமைக்க முயலும் தமிழக அரசைக்கண்டித்து “தமிழர் மரபுக்கெதிரான தமிழ் அன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு” சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (17.06.2019 திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தமிழர் பெ.மணியரசன், தமிழர் பேரியக்கத்தலைவர் தலைமையில், பொறியாளர்.செ.வெற்றிக்குமரன் தென்மண்டல செயலாளர், நாம் தமிழர் கட்சி முன்னிலையில் தென்மண்டலத்தைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்து பின்னர் விடுவித்தனர்.

செய்தி காளமேகம் மதுரை மாவட்டம்