குறிஞ்சிநகர் மலைவாழ் மக்களுக்கு தனியார் அமைப்பு நலத்திட்ட உதவிகள்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகரில் மலைவாழ் மக்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்கள் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கிடைக்கும் கிழங்கு, தேன் போன்றவைகளை எடுத்து விற்பனை செய்து பிழைப்பை நடத்திவருகின்றன.

இந்நிலையில் பவுல் அப்போஸ்தலர் தேவ அக்கினி அமைப்பைச் சேர்ந்த நிறுவனர் கருனாகரன் தலைமையில் இந்த அமைப்பினர் அங்கு வாழும் மலைப்பகுதிவாசிகளுக்கு 6 மாதத்திற்கு தேவையான அரிசி, ஆடைகள், மளிகைப்பொருள், என 1லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து இங்கு குடியிருக்கும் அனைவருக்கும் அசைவ சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியை அமைப்பைச் சார்ந்த ஒருங்கினப்பாளர் ஜெபாஸ்டின் ஏற்பாடுகளைச் செய்தார். மலைவாழ் மக்கள் அனைவரும் நலத்திட்ட உதவிகள் செய்த அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.