Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பதவிக்கு பெருமை சேர்க்கும் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்…நேரடியாக களத்தில்…

பதவிக்கு பெருமை சேர்க்கும் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்…நேரடியாக களத்தில்…

by ஆசிரியர்

பாராளுமன்ற தேர்தல் முடிந்து பதவி ஏற்று மாதங்கள் முடிந்தும் இன்னும் பாராளுமன்ற வளாகத்தில் நின்று செல்ஃபி எடுத்து போட்டு கொண்டிருக்கும் உறுப்பினர்களுக்கு மத்தியில், தொகுதி மக்கள் எதற்காக தேர்ந்தெடுத்தார்களோ அதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் இறங்கி விட்டார் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி.  நவாஸ் கனி ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்காக என்ற பிம்பத்தை உடைத்து, எந்த பேதமும் இல்லாமல் அனைத்து மக்களுக்காகவும் தான் என்பதை தன் செயல் மூலம் நிரூபணம் செய்து வருகிறார்.

பாராளுமன்ற உறுப்பினராகி ஒரு மாத காலத்திலேயே பல அத்யாவசியமான தேவைகளை நிறைவேற்ற அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் அவர் மேற்கொண்ட முயற்சிகள்..

ஆட்சியருக்கு பாராட்டு:-

ஜூண் முதல்  வாரத்தில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான குடிநீர் பிரச்சினை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து உடனடியாக பராமரிக்காமல் விடப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் பல திட்டங்களை நடைமுறைபடுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்த இராமநாதபுர மாவட்ட ஆட்சியரை ஊக்குவித்தது தன்னலமில்லாத பாராட்டினை தெரிவித்தார்.

நேரடி ஆலோசனைக்கு வேண்டுகோள்:-

மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை போல் அல்லாமல் நேரடியாக சமூக வலைதளங்களிலும் நேரடியாக பொது மக்களிடம் தண்ணீர் பிரச்சினையை தீர்க ஆக்கபூர்வமான யோசனைகளை கேட்டு விண்ணப்பித்து அனைவரையும் தானும் உங்களோடு ஒருவன் என்பதை உணர்த்தினார்.

இலவச உயர்கல்வி திட்டம்:-

பதவியேற்றவுடன் கல்லூரிகள் தொடங்கி பணம் சம்பாதிக்க யோசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் இராமநாதபுர பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டு தகுதி இருந்தும் மேற்கல்வி படிக்க பொருளாதார வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார்.

தண்ணிர் பிரச்சினை தீர ஆட்சியரிடம் மனு:-

மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் நின்று விடாமல் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை தேரில் சந்தித்து பராமரிக்காமல் கிடக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தை சிர்படுத்தவும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கூடுதல் நிதி ஒதுக்கவும், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து போர்க்கால அடிப்படையில் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை மனு அளித்துள்ளார்.

குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனருக்கு கோரிக்கை:-

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க இராமநாதபுரத்தில் உள்ள அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்ததோடு நிறுத்தாமல், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனரை சந்தித்து நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.

பதிவியேற்று ஒரு மாத காலத்திலேயே மக்களின் பிரச்சினைக்காக ஆக்கபூர்வமான முடிவுகளை எடுத்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது.  அதே சமயம் இதற்கு முன்னர் இருந்தவர்களுக்கும், இனி வரக்கூடியவர்களுக்கும் இவருடைய செயல்பாடுகள் ஒரு பாடமாக இருக்கும்.

இவருடைய பணி பதவி காலம் முடியும் வரை இதே வீரியத்துடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாமும் வாழ்த்துவோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!