Home செய்திகள் தமிழக முதல்வர் மேகதாது அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்-பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..

தமிழக முதல்வர் மேகதாது அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்-பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..

by ஆசிரியர்

தமிழக விவசாய ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் 14.06.19 இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் கடும் வறட்சி குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. காவிரி டெல்டாவில் 8 வது ஆண்டாக குறுவை சாகுபடியை இழந்து விட்டோம்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மே 28ம் தேதி 9 .02 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க உத்திர விட்டும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. கண்காணிப்புக் குழு அலுவலகம் பெங்களுரில் திறக்கப்படவில்லை. காலம் கடந்து கடந்த வாரம் தான் கர்நாடக, தமிழக அணைகளை அக்குழு ஆய்வு செய்துள்ளது.

இந்நிலையில் உபரி நீரை தடுத்து மோதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும உடன் கட்டுமானப் பணிகளை துவக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது சட்ட விரோதமானது.

உபரி நீர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே சட்டப்படி சொந்தம், கர்நாடகம் உரிமை கொண்டாடவோ, அணை கட்டவோ முடியாது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தும், காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேனையும் நேரில் சந்தித்து எடுத்துரைத்து மேகதாது அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். உபரி நீரை தடுத்து தமிழகம் ராசி மணல் அணை கட்ட அனுமதி பெற வேண்டும். காவிரியில் ஏற்பட்டுள்ள பேராபத்தை உணர்ந்து உடன் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்திட வலியுறுத்துகிறேன்.

மேலும் ஏற்கனவே சட்ட விரோதமாக ஆய்வறிக்கை தயார் செய்ய காவிரி மேலாண்மை ஆணைய அனுமதியில்லாமல் மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய உத்திரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தமிழக அரசின் வழக்கை ஏற்ற நீதிபதிகள் ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அணை கட்ட முடியாது என கூறி வழக்கு ஒத்திக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டிருக்குமேயானால் உடனடியாக நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணைக்கு தடை பெறுவதோடு, ராசி மணல் அணை கட்ட ஆய்வறிக்கைக்கு அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.அப்போது செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!