நிலக்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை வேண்டி குவிந்த பொதுமக்கள்…

 மாவட்டம் ,நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி முதல் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஒவ்வொரு கிராம வாரியாக வருவாய் தீர்ப்பாயம் என்று சொல்லப்படும் ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஜமாபந்திப் பொருத்தவரை நேற்று (13/06/2019) முசுவானுத்து, வீலி நாயக்கன்பட்டி, சித்தர்கள் நத்தம், சிவஞானபுரம்,, மாலைய கவுண்டன்பட்டி , குல்லக் குண்டு, கல்லடிபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது..

இந்த மனுக்களில் ஏராளமானோர் முதியோர்களே முதியோர் உதவித்தொகை வேண்டி மனுக்கள் தாக்கல் செய்தனர் . சுமார் 90 வயது உள்ள ஒரு முதியவர் தனக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என வேண்டி மனு கொடுத்தார். இதனை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உடனடியாக மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளையும்,கிராம நிர்வாக உதவியாளர்கள், அழைத்து கிராமப்புறங்களில் உள்ள முறையாக தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண்கள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களை அழைத்து அரசு நடத்தும் அனைத்து உதவி முகாமுக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத் தர அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும்.  நிர்வாக அதிகாரிகளும் கிராம நிர்வாக உதவியாளர் களும் 15 தினத்திற்குள் கிராமங்கள் தோறும் உள்ள பயனாளிகளை கண்டறிந்து உண்மைத்தன்மையை எனக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவண பாண்டியன், மண்டல துணை தாசில்தார்கள் ருக்மணி, மணிமேகலை, ராமசாமி, டேனியல், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..