நெல்லை மாவட்டத்தில் புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம்..

திருநெல்வேலி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலராக திரு.கணேஷ் 13.06.19 வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் .

நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய பாலா கடந்த மே மாதம் 31 அன்று ஓய்வுபெற்றதை தொடர்ந்து தேனி கல்வி மாவட்ட அலுவலராக இருந்த கணேஷ் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார்.

இவர் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 13.06.19 வியாழக்கிழமை அன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவர் கூறும்போது தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு எனப்படும் திருநெல்வேலி மாவட்டத்தை கல்வி வளர்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதாகவும், அரசுப் பள்ளிகள் வளரத் தேவையான முயற்சிகள் செய்யப்படும் என்றும்,கல்வித் துறையில் அரசு வழங்கும் திட்டங்கள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய வழிவகை செய்யப்படும் என்றும் கூறினார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply