உசிலம்பட்டியில் பல்வேறு கோவில்களில் திருவிழாக்கள்…

உசிலம்பட்டி காவலர் குடியிருப்பில் உள்ள அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவில் புனவராவர்த்தன நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கோவில் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் கோயில் கலசத்திற்கு சகல மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றினர். பின்பு சந்தன மாரியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி உசிலம்பட்டி டிஏஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள். காவலர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

உசிலம்பட்டி அருகே கவண்டன்பட்டி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பாரம்பரியமிக்|க வீரபத்திர சுவாமி கோவில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.

தென்பகுதியை நோக்கி வந்த வீரபத்திர சுவாமியை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர், கவணம்பட்டி, சில்லாம்பட்டியைச் சேர்ந்த கல்குட்டி, கூலன்,நாலரையான் என்ற மூன்று பங்காளிகள் அழைத்து வந்து கவணம்பட்டியில் கோவில் எழுப்பி வழிபாடு செய்து வந்த்தாக வரலாறு

இவர்களின் வாரிசுகள் மதுரை, தேனி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் வைகாசி மாதம் இந்த வீரபத்திர சுவாமிக்கு கிடா வெட்டி படையல் வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்

பல காரணங்களால் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த கிடாவெட்டு திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது

இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து 5000க்கும் அதிகமான கிடாகளை வெட்டி சாமிக்கு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…