காவலர் நிறைவாழ்வுப் பயிற்சி பட்டறை 15வது வார விழாவை துவக்கி வைத்து S.P. முரளி ரம்பா பேச்சு..

தமிழக அரசு, காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் “நிறைவாழ்வு பயிற்சி” (Well Being Programme) வகுப்பை ஆரம்பித்து, அதன் மூலம் காவல்துறையினர் அனைவருக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இப்பயிற்சியானது பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் (NIMHANS – National Institute of Mental Health and Neuro Sciences) என்ற நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட சிலருக்கும் பயிற்சி அளித்துள்ளனர்.

இப்பயிற்சி பெற்ற அனைவரும் ஒருங்கிணைந்து, மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் அனைவருக்கும் ஒவ்வொரு வாரமும் வெள்ளி முதல் ஞாயிறுவரை 3 நாட்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். ஒவ்வொரு வாரத்திற்கும் சுமார் 40 முதல் 50 காவல்துறையினர் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியின் 15வது வார விழாவை இன்று (14.06.2018) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா  தூத்துக்குடி ஆயுதப்படை அரங்கில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “இப்பயிற்சி இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது , இப்பயிற்சியை தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வாரம் 15வது வார‌ பயிற்சியாகும். இப்பயிற்சியின் நிறைவு நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, இதில் கலந்து கொண்ட நீங்கள் ஏதேனும் ஆலோசனைகள் சொல்ல விரும்பி தெரிவித்தீர்களானால் அதன்படி பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்”

“காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ஒருவருக்கொருவர் நண்பராகவும், சகோதரராகவும் பழஙக வேண்டும், அதே போன்று உங்கள் குடும்பத்தார்களும் மற்ற குடும்பத்தாருடன் சகோதரத்துவத்துடனும், நண்பர்களாகவும் பழகுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்”

“காவலர்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு முதலில் உங்கள் உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த 3 நாட்கள் காவலர்கள் தங்கள் பணிகளை மறந்து மகிழ்ச்சியாக கலந்து கொள்ள வேண்டும்” என பேசினார்.

இப்பயிற்சியில் தூத்துக்குடி மனநல மருத்துவர்  சிவசைலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். காவலர் நிறைவாழ்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்  ஜெயக்குமார் மற்றும் பயிற்சி பெறும் காவலர்கள் 40 பேர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் பாமா பத்மினி மற்றும் சார்பு ஆய்வாளர்  செல்லத்தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…