தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்வில் கனிமொழி எம்.பி..

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை எனில்  எதற்காக பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கவேண்டும்” – கனிமொழி எம்பி கேள்வி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும், கழிவுநீர் கால்வாய் தூர் வராமலிருப்பது, தெருவிளக்கு சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தர வேண்டும். தூத்துக்குடி  மாநகராட்சி பகுதிகளுக்கான சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி ஆகியவை பலமடங்கு  அதிகாரிகள் உயர்த்தப்பட்டுள்ளதை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  கீதாஜீவன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி   ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில்:- “மக்கள் கட்டமுடியாதபடி சொத்துவரி, குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். சொத்துவரி உயர்வை கண்டித்து நடைபெறும் இது அடையாள ஆர்ப்பாட்டம்தான்.  மக்கள் பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் “

முதலில் சட்டமன்ற தேர்தல் வருமா இல்லை, உள்ளாட்சித் தேர்தல் வருமா என்பது தெரியவில்லை. ஆனால் சட்டமன்ற தேர்தல் வந்தால் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் உள்ளாட்சி தேர்தலைத்தான் நடத்தும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த ஆர்ப்பாட்டம் இதனை பொருட்படுத்தாத நிலையில் திமுக சார்பாக வழக்கு தொடரப்படும்.

விவசாய கடனை திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் சொத்தை விற்று தான் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன்கூறியது குறித்து கேட்டதற்கு விவசாயிகளை கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை எனில் பின்னர் எதற்காக பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கவேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் NP ஜெகன்  பெரியசாமி,மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி : கனிமொழி M.P. முன்னிலையில் திமுகவில் இனைந்த அதிமுகவினர்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் அதிமுகவில் இருந்து விலகி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். அதிமுக  முன்னாள் மாவட்ட மீனவர் அணி செயலாளராக இருந்து வந்தவர், அவரது  தலைமையில் திரேஸ்புரம் பகுதியில் இருந்து சுமார் 50 மீனவர்கள் அதிமுகவில் இருந்து விலகி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..