Home செய்திகள் தேசிய வன்முறை தடுப்புச் சட்டம் அமைக்கக் கோரி டாக்டர்கள் சங்கம் தீர்மானம்..

தேசிய வன்முறை தடுப்புச் சட்டம் அமைக்கக் கோரி டாக்டர்கள் சங்கம் தீர்மானம்..

by ஆசிரியர்

இந்திய மருத்துவ கழகம் ராமநாதபுரம் மாவட்ட கிளை ஆலோசனை கூட்டம் ரோட்ட சங்க மகாலில் நடந்தது. தலைவர் டி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலர் ஏ.கலிலூர் ரகுமான் பொருளாளர் டி. ஆனந்த சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஜூன் 14 ஆம் தேதியை கருப்பு தினமாக கடைபிடித்து, மருத்துவ அமைப்புகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் இளம் மருத்துவர் ஒருவர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்து டாக்டர்கள் ஆலோசிக்கப்பட்டது. தேசிய அளவில் மருத்துவ அமைப்புகளுக்கான பாதுகாப்பு முறை வகுக்கப்பட வேண்டும் போக்சோ சட்டம் சொல்லும் விதிமுறைகள், இச்சட்டத்திலும் இணைக்கப்படவேண்டும், மருத்துவ மையங்களை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்து அவற்றின் பாதுகாப்பை அந்தந்த மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வன்முறைகள் நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும் மருத்துவ மையங்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டும் நிலை ஏற்படலாம் என கவலை தெரிவிக்கப்பட்டது. கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தல், மாவட்ட, வட்டார அலுவலகங்கள் முன் கோரிக்கை விளக்கம் போராட்டம் நடத்தல், மாவட்ட அதிகாரிகளை சந்தித்து தேசிய வன்முறை தடுப்புச் சட்டம் அமைக்கக் கோரி மனு தாக்கல் அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் இந்திய மருத்துவ கழக மாநிலக்குழு உறுப்பினர்கள்  சின்னதுரை அப்துல்லா, சி.திருமலை வேலு,  எம்.ரவி ராஜேந்திரன்,  ரவிச்சந்திரன், ஐ.மன்சூர், மதுரம் அரவிந்தராஜ், ஞானக்குமார், பெரோஸ் கான், ஸ்டீபன், ராணி ஸ்டீபன், ஷகீலா, ஜெயபாலன், ராஜா முகமது, அமீர் கான், அட்டீப் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!