Home செய்திகள் மதுரையில் வழிப்பறி.. கொள்ளை… கஞ்சா விற்பனை வழக்கில் பல நபர்கள் கைது..

மதுரையில் வழிப்பறி.. கொள்ளை… கஞ்சா விற்பனை வழக்கில் பல நபர்கள் கைது..

by ஆசிரியர்

கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை கீரைத்துறை நாகுபிள்ளை தோப்பைச் சேர்ந்த பாலகுமார் என்பவருடைய மகன் நந்தகோபால் 19/19 மற்றும் விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை தாலுகா, சிலுக்கபட்டியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவருடைய மகன் கார்த்திக் 20/19 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவுப்படி இன்று (14.06.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

21 கிலோ கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

இன்று C2 சுப்பிரமணியபுரம் (ச. ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெயபாண்டியன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை டவுன் ஆண்டாள்புரம், வசுதரா அப்பார்ட்மென்ட் எதிரில் இரயில்வே மேம்பாலம் அடியில் TVS Jupiter மற்றும் For Registration TVS Scooty Pep என்ற இரண்டு இருசக்கர வாகனங்களில் வெள்ளைநிற சாக்குப்பையில் கஞ்சா எடுத்துச் சென்றபோது அவர்களை பிடித்து சார்பு ஆய்வாளர் விசாரணை செய்தபோது சின்னச்சாமி, ஆண்டி , செல்வம், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு  அவர்களிடம் இருந்து 21 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TVS Jupiter மற்றும் For Registration TVS Scooty Pep என்ற இரண்டு இருசக்கர வாகனங்களும், கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.700/-ம் கைப்பற்றப்பட்டு நான்குபேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!