பொது மக்கள் குழந்தைகளின் நலன் கருதி தூத்துக்குடியில் 24 மணி நேர ஆவின் பாலகம் திறப்பு..

தூத்துக்குடியில் பொதுமக்கள், குழந்தைகளின் நலன்கருதி 24 மணி நேர ஆவின் பாலகம் காய்கனி மார்க்கெட் எதிரே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை நெல்லை – தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னத்துரை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.  விழாவில், ஆவின் பொது மேலாளர் அருணாகிரி நாதன், துணைப் பொது மேலாளர் சாந்தி,மேலாளர்கள் தங்கையா, அனிதா, சாந்தா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவின் சேர்மன் சின்னத்துரை பேசுகையில், பொதுமக்கள் குழநதைகளின் நலன்கருதி 24 மணிநேரமும் செயல்படும் வகையில்  இந்த பாலகம் திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நெல்லை டவுணிலும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 20 இடங்களில் ஆவின்  பாலகம் திறக்கப்படும்.  இங்கு ஆவின் பால், தயிர், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படும். திருமணம்,போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் சப்ளை செய்யப்படும். ஆவின் தலைவராக நான் பொறுப்பேற்ற பின்னர் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினமும் 41ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 51 லிட்டராக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து ஆவினுக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply