தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பசிபிக் ஏசியன் சர்வதேச அளவிலான யோகா போட்டி.. வெற்றி பெற்ற தமிழக வீரரகள்..

கடந்த 18.05.2019   மற்றும் 19.05.2019 ஆகிய இருநாட்கள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கைநான் ஸ்டேடியத்தில்  பசுபிக் ஏசியன் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 137 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டின் இந்தியா பயிற்சி கழகத்தின் சார்பாக கோவில்பட்டியிலிருந்து இப்போட்டியில் 15 முதல் 17 வயதுடைய பிரிவில்  கலந்து கொண்ட கயத்தாறு பள்ளியில் பயிலும் 10வது வகுப்பு மாணவி மதுபாலா என்பவர் தடகள யோகாவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

12 முதல் 15 வயதுடைய பிரிவில் கலந்து கொண்ட‌  கோயில்பட்டியில் 7வது  வகுப்பு பயிலும் மாணவர் சவுரி ராஜன் நடன யோகாவில் முதல் இடத்தை பிடித்து தங்கமும்,  தடகள யோகா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

10 முதல் 12 வயதுடைய‌ பிரிவில்  கலந்துகொண்ட கயத்தாறு பள்ளியில் 7வது வகுப்பில் பயிலும் மாணவர் கௌசிக் தடகள யோகாவில் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கமும், மாணவர் சுபாஷ் என்பவர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..