தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி..

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று ஜூன் 12ம் நாள் என்பதால்  S.P. முரளி ரம்பா தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது

இன்று(12.06.2019)  காலை 11மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா  தலைமையில் காவல் துறை அமைச்சு பணி நிர்வாக அதிகாரிகள்  சுப்பையா,  சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள் சுடலைமணி,  மயில் குமார், கணேசப் பெருமாள், எழில் செல்வம்,  மாரியப்பன், ராபர்ட், நம்பிராஜன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் பால முருகன், உதவி ஆய்வாளர்  உமையொருபாகம், சிவகுமார் மற்றும் காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்கள்

“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளில் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்” என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..