நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி..

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டையில் தாலுகா அலுவலகத்தில் நேற்று இரண்டாவது நாளாக திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் வருவாய் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. ஜமாபந்தி முன்னிட்டு சிலுக்குவார்பட்டி               நூத்துலாபுரம், பங்களாபட்டி, சின்னம நாயக்கன்பட்டி, எத்திலோடு, விளாம்பட்டி,  பிள்ளையார் நத்தம்,ஆகிய  கிராமங்களுக்கான வருவாய் ஜமாபந்தி மனுக்கள் பெறப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு ஒவ்வொரு மனுவையும் முறையாக பரிசீலனை செய்து பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களையும் மிகவும் சரியாக ஆய்வு செய்து தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் மனுக்களை தெளிவாக உரிய ஆவணங்களை பெற்று உடனடியாக பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர உத்தரவிட்டார்.

நேற்றுமுன்தினம் (11/06/2019) பெறப்பட்ட மனுக்களின் உடனடியாக 6 பேருக்கு முதியோர் உதவித் தொகையும்,, மூன்று பேருக்கு பட்டாவும், வாரிசுச் சான்று ஒருவருக்கும் மொத்தம் 11 பேருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாலுகா பொருத்தவரை நேற்று 278 மனுக்கள் பெறப்பட்டது.                           இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், சமூகநல பாதுகாப்பு தாசில்தார் சரவண பாண்டியன் துணை தாசில்தார்கள் மணிமேகலை, ருக்மணி, ராமசாமி, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.                                                   பட்டா மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்றவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்தும் பயனில்லை . ஆனால் கொடுத்தவுடனே பட்டா  வாங்கினார்கள் இதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..