இனி 5ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளும் ₹.6,000/- நிதி உதவி பெறலாம்..கீழக்கரை கிராம நிர்வாகி அதிகாரி அறிவிப்பு…

கடந்த மத்திய இடைக்கால மத்திய பட்ஜெட்டில்  2 ஹெக்டேர் (5ஏக்கர்) விளை நிலம் வைத்திருக்கும்  விவசாயிகளுக்கு ₹.6,000/- நிதி உதவி நேரடியாக 3 தவணையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 5 ஏக்கருக்கு மேல் விளை நிலையங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் ₹.6,000// உதவி தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. 

இது சம்பந்தமாக கீழக்கரை கிராம நிர்வாக அதிகாரி (VAO) ஆதலைட்சுமி கூறுகையில், புதிய விதிமுறைப்படி 5 ஏக்கருக்கு மேல் விளை நிலம் உள்ள விவசாயிகளுக்கும் உதவி தொகை வழங்கப்படும்.  இந்த உதவி தொகை பெற நிலத்தின் நேரடி பட்டாதாரராக இருக்க வேண்டும், விவசாயி பெயரில் ஆதார், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அலைபேசி எண் இருத்தல் அடிப்படையாகும் என்றார். 

 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..