பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடம் : முதலமைச்சர் பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை  தமிழக  முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று  திறந்து வைத்தார்

எட்டையாபுரம் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். மு. வீரப்பன், முதன்மை கல்வி அலுவலர் ஞானஜோதி, மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். மு.வீரப்பன் நன்றி தெரிவித்தார்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..