தூத்துக்குடி விமான நிலையத்தில் சுற்றுப்புறசூழலை பாதுகாக்க வேண்டி பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்கும் இயந்திரம்…

தூத்துக்குடி வாகைக்குளத்தில் உள்ள விமானநிலையத்திற்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக்பாட்டில்களை தூக்கி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புற சூழலை மேம்படுத்தவும் விமானநிலையத்தின் முகப்பில் ரூ. 1.26 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான துவக்கவிழா துாத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் நேற்று (11/06/2019)நடைபெற்றது. இயந்திரத்தினை விமானநிலைய இயக்குனர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விமானநிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள், பயணிகள்  பலர் கலந்து கொண்டனர்.

பயணிகள் இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் இயந்திரம் பிளாஸ்டிக் பாட்டில்களை சுக்குநுாறாக உடைத்து விடும். அதை மறுசுழற்சி செய்தும் பயன்படுத்த இயலும். பயணிகள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி விமானநிலையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மேலும் சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவ வேண்டுமென விமானநிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கேட்டு கொண்டார். 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..