உசிலம்பட்டி அருகே கவண்டன்பட்டியில் கடந்த 40 வருடங்களுக்கு பின் வீராகோயில் பெரும்கும்பிடு திருவிழாவை முன்னிட்டு தயாராகும் சாமிசிலைகள்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவண்டன்பட்டி கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கவண்டன்பட்டி கிராமத்தில் உள்ள வீரபத்திர சாமி கோயில் திருவிழா கடந்த 40 வருடங்களுக்கு பின் தற்போது நாளை மறுநாள் (13,14,15.06.19) ஆகிய மூன்று தினங்கள் கொண்டாடப்படுகின்றனர்.

இந்தகோயில் திருவிழாவின் முதல் நாளில் சாமிசிலைகள் மற்றும் புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து பொங்கல் வழிபாடு, மற்றும் கிடாவெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். கிடாவெட்டும் நிகழ்ச்சிக்காக சுமார் 10000 கிடாய்கள் காத்திருக்கின்றன. இந்த கோயில் திருவிழா புரவிஎடுக்கும் நிகழ்ச்சிக்காக சாமி சிலைகள், குதிரை, யானை, நாய், கருப்பசாமி சிலைகளை வடிவமைத்து கோயிலுக்காக தயாராகி வருகிறது.இந்த வீரபத்திரசாமி கோயிலை 3 பங்காளி வகையாறாவை சேர்ந்தவர்கள் இந்த திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

இந்த கோயிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து இந்த திருவிழாவை தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உசிலம்பட்டி நகர் மற்றும் கோயில் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply