
வேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமூக வளைதலங்களில் (வாட்ஸ் ஆப் ) வரும் தகவல் மற்றும் செய்திகள் உண்மை தன்மை அறிந்து ஷேர் மற்றும் பார்வேடு செய்ய வேண்டும். ஜாதி, மத பிரச்னைகளை உருவாக்குவது, பெண்களை தவறாக சித்தரிப்பது, தனிநபர் மற்றும் குழுக்களை விமர்சனம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது குற்றம். மீறும் நபர் மீது கடும் நடவடிக்கை பாயும். ஒவ்வொரு சமூக வளைதலங்களையும் ஆக வல் நுண்ணறிவு பிரிவு கண்காணிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
கே.எம்.வாரியார்