உசிலம்பட்டி அருகே தனியார் ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்….

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை தேனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த 40 பேருக்கு இதுவரை சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் வசந்த், அரவிந்த் ஆகியோரிடம் கேட்டபோது சம்பளம் தருவதாக ஏமாற்றி வந்தனர். மாதம் மாதம் ஊழியர்கள் சம்பளம் கேட்கும்பட்சத்தில் சம்பளம் தரமுடியாது என கூறியதை தொடர்ந்து வேலை பார்த்த 40 பேர் மதுரை மாவட்ட மாநகர காவல் ஆனையாளர் அலுவலகம் முன்பு சம்பளம் தராமல் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிகூறியதை தொடந்து ஆர்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..