தேனி அருகே பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல்..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் நேற்று காலை சருத்துப் பட்டியை சேர்ந்த ரஞ்சித் (29) அழகு ராஜா (21)அழகேசன் (23) ஆகியோர் வட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமா சென்றதை தட்டி கேட்ட போது அத்திரம் அடை மூன்று நபர்களும் லட்சுமிபுரத்தை சேர்ந்த முரளி, மனைவி ரேவதி, சகோதிரி இந்து ராணி ஆகியோரை நேற்று சரமாரி தாக்கியதில் படுகாயம் அடைந்த முரளி மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி முரளி மனைவி ரேவதி கொடுத்த புகர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வரும் நிலையில் சம்மந்தப்பட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்ய கோரி லட்சுமிபுரம் ஊர் பொது மக்கள் ஒரு நாள் கடை அடைப்பு செய்து சாலையோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி திண்டுகள் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்பது உடனே சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் இடம் பேச்சு வார்தை நடத்தி நாளை (13/06/2019) மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

மேலும் சாலையில் வந்த இரண்டு நபரை பொதுமக்கள் தாக்கினர் அவர்களை மீட்டு காவல் துறையினர் விசாரணையில் ஈடுப்படு வருகின்றனர்

.Aசாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..