குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு – மாணாக்கர் உறுதி மொழி..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் நா.கோமகன் தலைமையில் மாணவ, மாணவியர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அரசியல் சாசனப்படி கல்வி பயில ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் திருமேனி நாயகம், சத்துணவு அமைப்பாளர் தங்கம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..