மதுரையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி..

இன்று (12.06.2019)மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று (12/06/2019) நடைபெற்றது.

இந்த உறுதி மொழி நிகழ்வில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டோம் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்போம் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு எங்களால் இயன்றவரை பாடுபடுவோம் என்று காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..