இராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரத்தில் தொழிலாளர் துறை சார்பாகமாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கல்வி கற்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தொழிலாளர் துறை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணியானது அரண்மனை சாலையில் துவங்கி சாலைத் தெரு வழியாக ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து, ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்
தலைமையில் மாணவ, மாணவியர் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இப்பேரணியில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டு லைன் இயக்குநர் கருப்பசாமி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை தின எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image