மதுரையில் ஜாமீனில் இருந்தவர் வெட்டி கொலை…

மதுரை மாவட்டம் செல்லூர் மீனாட்சிபுரம் சேர்ந்த ஜெயம் மகன் அஜித் வயது 23, என்பவர் அவரது அண்ணன் ரஞ்சித் என்பவருடன்  இன்று (12/06/2019) காலை வழக்கு சம்பந்தமாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றுள்ளார்.

அச்சமயம் காவல்நிலையம் அருகே வரும் பொழுது அடையாளம் தெரியாம கும்பல் ஒன்று அஜீத்தையும் அவருடைய சகோதரரையும் விரட்டி வெட்டியுள்ளது. இச்சம்பவத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்,  அவரது அண்ணன் ரஞ்சித் லேசான காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply