முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழி திறமை மற்றும் தொழில்சார் ஆற்றல் பற்றிய ஓரு நாள் கருத்தரங்கம்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழி திறமை மற்றும் தொழில்சார் ஆற்றல் பற்றிய ஓர் நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை அரபித் துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R. நாதிரா பானு கமால் ஆசிரியர் மாணவர்களிடம் வேறுபட்ட சூத்திரத்துடனும், தொடர்பு திறனுடனும், மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், தங்களது ஆசிரியர் பணியை பிரியமுடன் செய்யுமாறும் கூறி அனைத்து ஆசிரியர்களையும், சிறப்பு விருந்தினரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.

அத்துடன்சிறப்பு விருந்தினர் Dr.S.சாஹிரா பானு M.A, M.Phil, Ph.D., ஸ்ரீ மீனாட்சி மகளிர் அரசினர் கலைக் கல்லூரி, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை  ஆசிரியர்களுக்கு தொடர்பு திறன், கேட்கும் திறன், வழங்கும் திறன், எழுதும் திறன், பேசும் திறன் போன்ற தங்களது திறன்களை முன்னேற்றம் அடைய வழிகளைக் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் முகம்மது சதக் நிர்வாகத்தின் தலைவர் .S.M. முகம்மது யூசுப், நிர்வாக இயக்குனர். P.R.L.S ஹமீது இப்ராகிம், செயலாளர் S.M.H சர்மிளா  இந்நிகழ்வு இனிதே நடைபெற தங்களது வாழ்த்தினைத் தெரிவித்தனர். இறுதியாக ஆசிரியர் முன்னேற்றக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதத் துறைத்தலைவர் G.குணவதி நன்றியுரை வழங்க இனிதே இந்நிகழ்வு நிறைவுற்றது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image