ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 1428-ம் பசலி மேலாண்மை துறை சார்பாக ஜமாபந்தி நடைபெற்றது..

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்
12/06/19 இன்று வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை 1428-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பலங்குடியினர் நல அலுவலரும் மாவட்ட துணை ஆட்சித் தலைவருமாகிய முத்துகழுவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பயனாளர்களுக்கு தேவையின் அடிப்படையில் முதியோர் உதவித் தொகை, ஜாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவைகளை தகுதியின் அடிப்படையில் உடனடியாக கிடைப்பதற்கு ஆவண செய்தார். மேலும், பட்டா மாறுதல் சம்மந்தமாக மனு அளித்த பயனாளர்களுக்கு நில அளவையர் மூலமாக சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைவில் ஓரிரு நாட்களுக்குள் பட்டா கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்த ஜமாபந்தியில் கலந்துகொண்ட பயனாளிகள் அரசின் நல திட்டத்தை பாராட்டி பயன்பெற்றுச் சென்றனர். மேலும் இத்திட்டம் 12/06/19 முதல் 14/06/19 வரை மூன்று நாட்களுக்கு கிராமம் வாரியாக ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..