கழுகூரணி நடுநிலைப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா…

இராமநாதபுரம் அருகே கழுகூரணி நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர்  உஷாராணி  தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர்  விமலாரமணி, சாய் ரீஜென்ஸி பவர் கார்ப்பரேஷன் மேலாளர்  ஹரி பாபு, ஊர் தலைவர் காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.       பள்ளி தலைமைஆசிரியர்  சித்ரா வரவேற்றார்.    மாணவ, மாணவியர், பெற்றோர், கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

ஆசிரியர் பயிற்றுநர்  வனிதா, கழுகூரணி   சங்கிலி ராஜ், ராமநாதபுரம் பால்வள கூட்டுறவு சங்க தலைவர் கங்கா கருணன், ஊராட்சி செயலர் ரமாபிரியா, துரை, கோபிநாத், கதிரேசன்     உள்பட  கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆசிரியர் பழனிக்குமார், ஆசிரியைகள் உமாராணி, ராஜேஸ்வரி, முனீஸ்வரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். ஆசிரியை ரமணி நன்றி கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image