வறட்சி மாவட்டமாக தூத்துக்குடியை அறிவிக்க கோரி கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் 12.06.19 இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2015 முதல் 2018 வரை தூத்துக்குடி மாவட்டம் கடும் வறட்சியை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இந்த வறட்சியை கருத்தில் கொண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள், நகைக்கடன், பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோளப் பயிருக்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படமால் நிலுவையில் உள்ளது.

இந்த நிவாரணத் தொகையை ஜீன் மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், 2017-18ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டை அனைத்து பயிர்களுக்கும் குளறுபடி இல்லாமல் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்த விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் பாகுபாடின்றி அரசியல் தலையீடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், தென் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைய தீர்க்க தாமிபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து, மக்கள் பயன்படுத்துவதற்கு கொண்டு வர வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அந்த அமைப்பின் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..