நெல்லை மாவட்டத்தில் ஜூன்.14ல் அம்மா திட்டமுகாம்.. ஆட்சியர் அறிவிப்பு..

நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் வருகிற ஜூன்.14 வெள்ளிக்கிழமை அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள குறிப்பில் அம்மா திட்ட முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேந்திமங்கலம், அடையக்கரிசல்குளம், நாங்குநேரி வடுகச்சிமதில், சேரன்மகாதேவி உலகன்குளம், பாளையங்கோட்டையில் பாளையங்கோட்டை 3, சங்கரன்கோவிலில் கீழநீலிதநல்லுார், திருவேங்கடம் வட்டம் கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் வரும் 14 ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பாக மனுக்களை அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply