வேலூர் அருகே வேன் கவிழ்ந்து இருவர் பலி… 10கும் மேற்பட்டோர் படுகாயம்..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலை மற்றும் ஷூ கம்பெனிகள் உள்ளன. ஆம்பூர் அடுத்த கொல்ல குப்பம் பகுதியிலிருந்தும் மணியார்குப்பம் பகுதிலிருந்தும் ஒரு வேனில் 25-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளிகளை ஏற்றி கொண்டு உமாராபாத் சாலையில் சென்று கொண்டு இருக்கும் அதிக லோடு காரணமாக வேனில் ஏற காத்திருந்த வடகரை கிராமத்தை சேர்ந்த சிவகாமி (35) மீது மோதியது, இதில் அவர் இறந்தார். இதன் காரணமாகவேன் தலைகீழாக கவிழ்ந்தது.

வேனில் இருந்த பெண் தொழிலாளிகள் அலறினர்.இடிபாடுகளில் சிக்கி ஈச்சம்பட்டு உஷா (35) சம்பவ இடத்தில் பலியானார். 25-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளிகள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரு வேனில் 15 பேர் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். ஆனால் கிட்டதட்ட 30 தொழிலாளிகள் அதில் ஏற்றப்பட்டதால் பாரம் தாங்காமல் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

வேலூர் மாவட்ட ஆர்டிஓ (RTO) உடனடியாக தொழிற்சாலைகம்பெனி வேன்களை ஆய்வு செய்ய வேண்டும்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply