Home செய்திகள் சென்னையில் சாலையில் ஒளிரும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள்…

சென்னையில் சாலையில் ஒளிரும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள்…

by ஆசிரியர்

இந்தியாவில் முதன் முறையாக சென்னைக் காவல்துறையினரின் நுண்ணிய நல்முயற்சி. போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாலையில் ஒவ்வொரு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அவற்றைக் கவனிப்பதும் சிலநேரங்களில் கவனித்தும், விதிமுறைகளை மீறிச் செல்வதும் ஆங்காங்கே நடைபெறுகிறது.

இவற்றைத் தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை மதிக்கவும் சென்னைக் காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்தவகையில், தற்போது புது முயற்சியாக சிக்னல் கம்பங்களின் கீழே நிறுத்தக் கோட்டை வாகன ஓட்டிகளின் கண்களுக்குத் தெரியுமாறு சாலையிலேயே சிவப்பு, வெள்ளை, நீல வண்ணங்கள் மாற்றி மாற்றி ஒளிருமாறு விளக்குகள் பொருத்தியுள்ளனர் காவல்துறையினர். சிக்னல் கம்பங்களைக் கவனிக்கத் தவறும் ஓட்டிகளின் கண்களில்கூட சாலையில் ஒளிரும் இந்த சிக்னல் விளக்குகள் படாமல் போகாது என்பதால் இத்தகைய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகாரணமாக சிக்னல் விளக்குகளைக் காணத் தவறினால்கூட வாகன ஓட்டிகள் சாலையின் நடுவில் ஒளிரும் இந்த விளக்குகளைப் பார்த்து வாகனத்தை அதற்கேற்ப கட்டுப்படுத்தமுடியும். வெளிநாட்டில் மட்டுமே உள்ள இதுபோன்ற போக்குவரத்து விளக்கு ஏற்பாடுகள் இந்தியாவில் அதிலும் சென்னையில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கு, பல்வேறு இடங்களில் உள்ள சிக்னல்கள், யூ டர்ன் எனப்படும் வளைவு, ஸ்பீட் பிரேக்கர்கள் ஆகிய இடங்களிலும் இந்த ஒளிரும் சிக்னல் விளக்களைப் பொறுத்தவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இத்தகைய புதிய முயற்சிக்கு அனுமதியும், ஊக்கமும் அளித்துள்ள சென்னை காவல்துறை ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், ஐ.பி.எஸ் மற்றும் போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் திரு .அருண், ஐ.பி.எஸ். ஆகியோர் சென்னையில் சாலை விபத்துக்களைத் தவிர்க்க அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் செய்ய காவல்துறையினருக்கு வழிகாட்டி வருகின்றனர்.

செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!