இரண்டு முக்கிய பிரபலங்கள் மறைவு…

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு .

புதுச்சேரியில் கடந்த 1996-99 ஆண்டு வரை திமுகவின் முதல்வராக இருந்தவர் ஆர்.வி.ஜானகிராமன் (79) இன்று 10-ம் தேதி அதிகாலை இயற்கை ஏய்தினார். சில நாட்கள் உடல் நலம் குன்றி இருந்தார். நாளை அவரது சொந்த ஊரான திண்டிவனம் தாலுகா ஆலத்தூரில் காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகின்றது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

பிரபல கன்னட எழுத்தாளர் நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு..

பிரபல கன்னட எழுத்தாளர் நடிகர் கிரிஷ் கர்னாட் (81) காலமானார். காதலன், ‘ஹேராம், செல்லமே, மின்சார கனவு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர். பெங்களூருவில் வசித்த வந்த அவர் வீட்டில் இருக்கும் போது உயிர் பிரிந்தது.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image