குற்றாலத்தில் சீசன் துவங்குமா?எதிர்பார்ப்பில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் வியாபாரிகள்..

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாட்களில் சீசன் தொடங்கி குற்றாலம் அருவி சுற்றுலாப்பயணிகள் நிறைந்து காணப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சென்ற குற்றாலத்தில், தற்போது பருவமழை இல்லாததால் குற்றாலம் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. குற்றாலம் அடுத்த ஐந்தருவியில் மட்டும் குறைந்த அளவு நீர் கொட்டுகிறது.

மெயின் அருவி,பழையகுற்றாலம், போன்ற அருவிகளில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு பாறை மட்டுமே காட்சி அளிக்கிறது. இங்கு குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் குற்றாலம் சீசனை நம்பியே கடை வைத்து உள்ள வணிகர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓரிரு கடைகள் தவிர மீதம் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் லேசான சாரல் போன்ற தூறல் மழை பெய்துள்ளது.

குற்றால சீசனை எதிர்பார்த்து வியாபாரிகள் கடைகளை தயார் செய்து வருகின்றனர்.படகு குழாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் பெயிண்ட் அடிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image