பா.ஜ.க ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து நரேந்திர மோடி இலங்கை அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்- மதுரையில் வைகோ பேட்டி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (9/6/2019) மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

மறைந்த மாலை முரசு செய்தியாளர் மற்றும் ANI மூத்த செய்தியாளருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை 90 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் லட்சக்கணக்கானேர் இலங்கையின் இனப் படுகொலையை செய்யப்பட்டு மூடி மறைக்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து நரேந்திர மோடி இலங்கை அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

அவர்கள் கடற்தொழில் சட்டத்தைக் கொண்டுவந்து நமது மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்தும் மூன்று வருடம் சிறைத்தண்டனை விதித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று கூறினோம். அங்கு வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய உணர்வு பிரதமர் அவர்கள் இருப்பதாக இல்லை என்பது மிகுந்த வேதனையையும், ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழர்கள் மத்தியில் இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் என்ற வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

சிங்கள அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தியது. தற்போதும் அந்தக் கொள்கையைத் தான் முன்னெடுக்கும் வகையில் புத்த மதத்தை ஊக்குவிப்பது, இந்து கோயில் வளாகங்களிலேயே புத்த மத கொள்கைகளை பரப்பி வருகிறது. பெரும் அநீதிகளை விளைவிக்ககூடிய நிகழ்வுகளாகும்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் தோல்வியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் தோற்றுப் போகும் பயத்தின் காரணமாக அதிமுகவினர் வார்டுகளில் மறு சீராக அமைப்பை கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.

கீழை நியூஸுக்காக
மதுரை நிருபர் கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..