சமூக ஆர்வலர்களால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட சாய்ந்த மரம்..

நேற்று மதியம் 5 மணியளவில் கீழக்கரை பழைய மீன்கடை அருகே பலத்த காற்றீன் காரணமாக அப்பகுதியில் இருந்த ஒரு மரம் சரிந்து விழுந்தது. இதை நாமும் செய்தியாக வெளியிட்டுருந்தோம். இதை கேள்விப்பட்ட  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளையை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் இன்று அதிகாலை அப்பகுதியில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக கிடந்த அந்த மரத்தை முழுமையாக அப்புறப்படுத்தினர்.

அப்பகுதியை கடந்து சென்றவர்களும் அந்த தெருவைச் சேர்ந்தவர்களும். மரம் அகற்றிய தன்னார்வலர்களை பாராட்டிச்சென்றது பணியில் ஈடுபட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..