மதுரையில் கந்து வட்டி கொடுமையால் கேபிள் டிவி ஆபரேட்டர் தற்கொலை முயற்சி..

மதுரை சம்மட்டிபுரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி கலா. தொழில் விருத்திக்காக செல்லூரில் உள்ள ஈஸ்வரி, சாந்தி ஆகியோரிடம் ரவி கடன் வாங்கி இருந்துள்ளார். அதற்கு வட்டியும் செலுத்தி வந்துள்ளார். ஆனால் அசல் தொகையை விட கூடுதலாக வட்டியை ரவி செலுத்தியுள்ளாராம். இந்நிலையில் வட்டிக்கு கொடுத்த ஈஸ்வரி, வட்டி மற்றும் அசல் தொகை செலுத்தவில்லை என்று கூறி, பணத்தை உடனே கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து ரவி, போலீசில் புகார் செய்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறியப்படுகிறது.

இந்நிலையில் சாந்தி, ஈஸ்வரி நேற்று (8/6/18) மீண்டும் பணம் கேட்டு ரவி, அவரது மனைவியை வீட்டிற்கு சென்று மிரட்டியிருக்கிறார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் .

பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக
மதுரை கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..