மதுரையில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலத்துறை SC/ST. ஆசிரியர்,காப்பாளர் மற்றும் பணியாளர் நலச்சங்கம் துவக்க விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம்..

மதுரையில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் நலத்துறை SC / ST. ஆசிரியர் காப்பாளர், மற்றும் பணியாளர் நலச்சங்கம் துவக்க விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் அழகர் கோயில் பிரதான சாலையில் உள்ள தேவேந்திரர் மகாலில் நடைபெற்றது.

பொதுக்குழுவில் மாநில பொதுச்செயலாளர் திலகர் பேட்டியின் போது கூறியதாவது:  இந்த பொதுக்குழவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆதிதிராவிடர். பழங்குடியினர் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பதவி உயர்வு,பணி மாற்றம் போன்றவையை உடனடியாக நடத்த வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகள் மதுரையில் 350 க்கு மேற்ப்பட்ட துப்புறவு தொழிலாளர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிகின்றனர். அவர்களை நிரந்தரமாக பணியில் நியமிக்க வேண்டும். நிர்வாக பணியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நிர்வாக துறையில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். காமராஜர் பல்கலைக்கழகத்தில் 450 பணியாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும்.Sc/ST சட்டத்தில் இருந்து முறையான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். என கூறினார்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..