பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெளியே வந்த திருப்பரங்குன்றம் தங்கத்தேர் – பக்தர்கள் மகிழ்ச்சி..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு பக்தர்களின் வசதிக்காக பல கோடி செலவில் தங்கத்தேர் செய்யப்பட்டது.  இந்த தேருக்கு பல ஊர்களை சேர்ந்த தொழிலதிபர்கள் நன்கொடையும் வழங்கினார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேர் இழுக்க கட்டணமாக ரூ 2000/- வசூலிக்கப்படுகின்றது. இந்த தேர் இழுப்பதன் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும்.

ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் தங்கத்தேர் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக இயங்காமல் இருப்பதால் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு சுமார் ஒரு கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விழா காலங்களில் தரிசன கட்டணத்தை ரூ.50 லிருந்து 100 ரூபாயாக உயர்த்தி வருவாய் ஈட்டும் கோயில் நிர்வாகம் கடந்த இரண்டு வருடமாக அதிக வருவாய் ஈட்டக்கூடிய த்ங்கத்தேரை இயக்காமல் பராமரிப்பு பணி என கூறுவது ப்ல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் இதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

நேர்த்தி கடன் செலுத்த விரும்பும் பக்தர்களை மிகவும் வருத்தமடைய செய்தது.இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்ட போது முறையான பதில் வரவில்லை. கோயில் நிர்வாகம் முறையான பதிலளிக்காமல் தட்டிக் கழிப்பது பக்தர்களிடையே தங்கத்தேர் குறித்த பல்வேறு சந்தேங்களை எழுப்பியது. எனவே இந்து சமய அறநிலைய துறை உடனடியாக தங்கத்தேர் இயங்க நடவடிக்கை எடுத்து இதில் உள்ள மர்மத்தை பக்தர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிகைகையாக விடுத்தனர். இந்நிலையில் கோவிலில் உள்ள தங்கத்தேரை கோவில் அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பராமரிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தங்கதேரானது பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.தங்கத்தேரின் இயக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி அளித்ததை தொடர்ந்து இன்று மாலை ஆறு மணிக்கு தங்கத் தேரை நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்து தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் மைய மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தங்கத் தேரை திருக்கோவில் இணை இயக்குனர் பொறுப்பு அதிகாரி மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு ஆராதனை நடைபெற்றது அதில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தங்கத்தேர் புறப்பாடு மீண்டும் தொடங்கியது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image