மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி பலி…

மேலூர் அருகே உள்ள குருத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ராஜமூர்த்தி (வயது 19). லேத் பட்டறை தொழிலாளியாக உள்ளார். இவர் இன்று (08/06/2019) காலை கீழவளவு சாலையில் சென்றபோது நிலை தடுமாறியதில் அங்கிருந்த பாலத்தில் மோதி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜமூர்த்தி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..